திருவண்ணாமலை

உயிரி வேதியியல் துறை கருத்தரங்கம்

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் உயிரி வேதியியல் துறை சார்பில், சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிப் பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர் ஏ.கஸ்தூரி, கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் உயிரி வேதியியல் துறைத் தலைவர் மு.சுதா வரவேற்றார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார் கருத்தரங்கை தொடக்கிவைத்தார்.
தென்னாங்கூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.யுவராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உயிர் வேதியியலின் அணுகுமுறை என்ற தலைப்பில் பேசினார். மேலும், உயிரி வேதியியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில், உயிரி வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் வி.சின்னசாமி, பேராசிரியர்கள் எஸ்.பழனி, பி.கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

SCROLL FOR NEXT