கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் மென்பொருள் கணினி அறிவியல் துறை சார்பில், கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் மென்பொருள் கணினி அறிவியல் துறை சார்பில், கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர் பி.என்.கே.ராஜேந்திரன், கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென்பொருள் கணினி அறிவியல் துறைத் தலைவர் சு.அனந்தநாராயணன் வரவேற்றார்.
கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் சி.திருமூர்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார். இதில், கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், மென்பொருள் கணினி அறிவியல் துறை மாணவி ஏ.பூமிகா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.