நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
நடிகர் மம்மூட்டி டாக்டர் பட்டம் பெற்றது குறித்து...
நடிகர் மம்மூட்டிக்கு கௌர டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியளவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்தும் வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான களம்காவல் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றது.
பின், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த பேட்ரியாட் சுமாரான விமர்சனங்களையே பெற்றதால் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. தற்போது, மட்டஞ்சேரி மாஃபியா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டியின் சினிமா பங்களிப்பைப் பாராட்டும் விதமாக கேரளத்திலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இந்தப் பட்டத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நடிகர் மம்மூட்டிக்கு வழங்கி தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பட்டமளிப்புக்குப் பின் பேசிய நடிகர் மம்மூட்டி, “என் அப்பாவிற்கு நான் மருத்துவராக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனாலும், கடந்த 45 ஆண்டுகளாக நான் உங்களுக்கு சினிமா மூலம் சிகிச்சையளித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் இறுதி மூச்சுவரை அதை செய்வேன்.” எனக் கூறினார்.
நடிகர் மம்மூட்டி நடித்த ஆனந்தம் திரைப்படம் இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Mammootty has been conferred an honorary doctorate.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.