திருவண்ணாமலை

கிரிவலப் பாதை விரிவாக்கப் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

திருவண்ணாமலையில் ரூ.65 கோடியில் நடைபெற்று வரும் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

DIN

திருவண்ணாமலையில் ரூ.65 கோடியில் நடைபெற்று வரும் கிரிவலப்பாதை விரிவாக்கப் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது.  இந்த நிதியில் இருந்து காஞ்சி சாலை அபயமண்டபம் முதல் அண்ணா நுழைவு வாயில் வரை 2.6 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் வடிகால் அமைக்கும் பணிகள், மலையின் வெளிப்புறம் 5 மீட்டர், உள்புறம் 2 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணிகள், இருக்கைள், மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல, கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான ஓய்வு அறைகள், கழிப்பறை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள், மின்விளக்கு வசதி, சிசிடிவிகேமராக்கள், தகவல் ஒலி பெருக்கிகள், மரச்சிற்பங்கள் என பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT