திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

திருவண்ணாமலையில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.அஸ்வினி கிரேஸ் ஜெபப்பிரியா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சி.ஹேமச்சந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் பிரபாவதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று 8 மாதங்களாகியும் பணியில் இருந்து விடுவிக்காத செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 
சீருடை மாற்றத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு பாகுபாட்டை களைய வேண்டும் என்பன உள்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT