திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஜவுளி கடையில் 450 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

DIN


திருவண்ணாமலையில் பிரபல ஜவுளிக் கடையிலிருந்து தடை செய்யப்பட்ட 450 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை நகரில் தேரடி தெரு மற்றும் பல இடங்களில் துணிக் கடை நடத்தி வரும் பிரபல தனியார் துணிக் கடையில் தடை செய்யப்பட்ட நெய்யாத பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த புகாரை அடுத்து, திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ரூ.50 ஆயிரத்திலான நெய்யாத 450 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT