திருவண்ணாமலை

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 44 பேருக்கு பணி நியமன ஆணை

DIN

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 44 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
 திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், திருவண்ணாமலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வளாக நேர்காணல் அண்மையில் நடைபெற்றது. சென்னை பாடி பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில், நடைபெற்ற வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 76 பேர் கலந்து கொண்டனர்.
 எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 44 பேருக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரித் தலைவர் ஆர்.குப்புசாமி வழங்கினார்.
 நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநர் வி.ராஜா, முதல்வர் டி.சர்வேசன், இயந்திரவியல் துறைத் தலைவர் ஏ.ராஜா, கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT