திருவண்ணாமலை

படைவீடு ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN


போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள படைவீடு ரேணுகாம் பாள் கோயில் அருகேயுள்ள ஆக்கிர மிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
படைவீடு ரேணுகாம்பாள் கோயிலில் வரும் 19-ஆம் தேதி ஆடி வெள்ளித் திருவிழா தொடங்க உள்ளது. இந்த நிலையில், கோயில் பகுதியில் உள்ள பொதுமக்கள், கோயிலைச் சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர்.
இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், நெடுஞ்சாலைத் துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, உதவி கோட்டப் பொறியாளர் ரவி, கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன், உதவிப் பொறியாளர் நிதின், வருவாய் ஆய்வாளர் அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர்  மகாலிங்கம் மற்றும் வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT