திருவண்ணாமலை

செங்கம்: 3-ஆம் நாள் ஜமாபந்தியில் 396 மனுக்கள் 

DIN

செங்கத்தில் நடைபெற்ற மூன்றாம் நாள் ஜமாபந்தியில் 396 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
 செங்கம் வட்டத்தில் இறையூர் குறுவட்டத்துக்கு உள்பட்ட தொரப்பாடி, நரசிங்கநல்லூர், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கான மூன்றாம் நாள் ஜமாபந்தி செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 ஜமாபந்தி அலுவலராக திருவண்ணாமலை மாவட்ட தனித் துணை ஆட்சியர் வில்சன்ராஜசேகர் கலந்துகொண்டு, பட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை, சிறு, குறு விவசாய சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் கோரி பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 390 மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
 மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கிய அவர், மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
 வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சங்கரன் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி உள்பட வருவாய்த் துறையினர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT