திருவண்ணாமலை

செய்யாறு ஜமாபந்தியில் 4 பேருக்கு பணி ஆணை: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

DIN

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும்  ஜமாபந்தியில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
செய்யாறு வட்டத்தில் 1428 -ஆம் பசலிக்கான ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
வருவாய் தீர்வாயம் நடைபெற்ற கிராமங்களில் பொது மக்களிடம் இருந்து பட்டா மாற்றம், வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை  உள்பட 320 மனுக்கள் பெறப்பட்டு இருந்தன. 
இம்மனுக்களில் பட்டா மாற்றம், மாற்றுத் திறனாளிக்களுக்கான சக்கர நாற்காலி, முதியோர் உதவித்தொகை மனுக்கள், சான்றுகள் உள்பட 12 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன. மேலும்,  திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் நாகப்பன் மனைவி சுமதி, ரவிச்சந்திரன் மனைவி கௌரி ஆகியோருக்கு கிராம உதவியாளர் பணியும், பலராமன் மகள் தமிழ்ச்செல்வி,  தியாகராஜன் மனைவி கமலாதேவி ஆகியோருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. இதற்கான பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினர். 
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT