திருவண்ணாமலை

பழுதடைந்த சிறு மின்விசை நீர்த்தேக்கத் தொட்டி

DIN

செங்கம் நகரில் பழுதடைந்த சிறு மின்விசை நீர்த் தேக்கத் தொட்டியை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
செங்கம் மசூதி தெரிவில் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டுக்கு பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறு மின்விசை குடிநீர்த் தேக்கத் தொட்டி பழுதடைந்து, பல மாதங்களாக பயனற்ற நிலையில் உள்ளது.
 பழுதடைந்த இந்த குடிநீர் தேக்கத் தொட்டியை சரிசெய்யக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிசெய்ய முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 
அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ளதாகவும், குடிநீர்த் தேக்கத் தொட்டியை சரிசெய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால்,  தினசரி 50 குடும்பங்கள் வரை பயனடைவர் எனவும் தெரிவிக்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து,  அந்த சிறு மின்விசை குடிநீர்த் தேக்கத் தொட்டியை சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT