திருவண்ணாமலை

புள்ளி விவரங்களைச் சேகரிக்க வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க அறிவுரை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் சார்பில் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வரும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் மாநில பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை மூலம் அவ்வப்போது பொதுமக்களிடம் அவர்களது கல்வி, சுகாதாரம், வாழ்க்கைச் செலவினம், வேலைவாய்ப்பு, விவசாயம் மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து வருகிறது.
 இந்தத் தகவல்களை தொகுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கைகளாக அனுப்பி வருகிறது. இந்த அறிக்கைகள் மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை வகுத்து செயல்பட உதவியாக இருக்கும்.
 எனவே, பொதுமக்கள் தங்களிடம் மேற்கண்ட விவரங்களைச் சேகரிக்க வரும் அரசுப் பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து, புள்ளி விவரங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT