திருவண்ணாமலை

அரசுக் கல்லூரியில் முத்தமிழ் விழா

DIN

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் வியாழக்கிழமை முத்தமிழ் விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு.சின்னையா தலைமை வகித்தார். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பா.சுப்புலட்சுமி வரவேற்றார். மண்ணிசைப் பாடகர்கள் செந்தில்வேலன், செல்லங்குப்பம் சுப்பிரமணியன் ஆகியோர் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினர்.
சாதி, மதம் அற்றவர் என்று இந்தியாவிலே முதல் முறையாக சான்றிதழ் பெற்ற திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் சிநேகா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வெல்லும் சொல் என்ற தலைப்பில் தற்போதைய பெண்களின் நிலை, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார்.
விழாவில், பேராசிரியர்கள் இல.ரேவதி, கோ.சாந்தமூர்த்தி, கா.ராஜமாணிக்கம் உள்பட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT