திருவண்ணாமலை

ஏப்ரல் 4-ஆம் தேதி வரை கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறும் 16-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் வராமல் தடுக்க, ஆண்டுக்கு 2 முறை இலவசமாக கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை 16-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடிந்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கால்நடைகள் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுக்க தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT