திருவண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: திமுக  கூட்டணி வேட்பாளர்கள்

DIN

கள்ளக்குறிச்சி (திமுக)
பெயர்    :    பொன்.கௌதமசிகாமணி (44)
பிறந்த தேதி    :    21.8.1974
பெற்றோர்    :    க.பொன்முடி,  
        விசாலாட்சி
மனைவி    :    கவிதா, மருத்துவர்
பிள்ளைகள்    :    கயல், 
        சூர்யா பொன்முடி
சொந்த ஊர்    :    கிழக்கு சண்முகபுரம், 
        விழுப்புரம், 
கல்வி    :    எம்.பி.பி.எஸ்.- 
        எம்.எஸ்., ஆர்த்தோ
தொழில்    :    மருத்துவர்
அரசியல் அனுபவம்    :    தளபதி நற்பணி மன்ற         மாவட்டத் தலைவர்

திருவண்ணாமலை (திமுக)

பெயர்    :    சி.என்.அண்ணாதுரை (45)
பிறந்த தேதி    :     21.06.1973
பெற்றோர்    :    சி.நடராஜன் 
        (முன்னாள் திமுக 
        ஒன்றியச் செயலர்) 
        - சரோஜா
மனைவி    :    ஏ.தீபா 
        (பல் மருத்துவர்).
பிள்ளைகள்    :    ஏ.பிரஜித், ஏ.உதயா.
சொந்த ஊர்    :    தேவனாம்பட்டு 
        கிராமம், திருவண்ணாமலை வட்டம்,     கல்வி    :    பி.காம்.
தொழில்    :    விவசாயம்,  ஒப்பந்ததாரர்.
அரசியல் அனுபவம்    :    10 ஆண்டுகள் ஊராட்சிச் செயலர்.
2006 முதல் 2011 வரை ஒன்றியக் குழு துணைத் தலைவர்.
2012 முதல் 2019 வரை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.
2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கடலூர் (திமுக)

கடலூர் மக்களவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளராக கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் (48) போட்டியிடுவதாக அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 
பி.பி.எம். பட்டதாரியான இவர், கட்சியின் மேற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். முந்திரி இறக்குமதி, ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு காயத்ரி, ஸ்ரீநிதி, கண்மணி ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

சிதம்பரம் (தனி) விடுதலைச் சிறுத்தைகள்
பெயர்    :    தொல்.திருமாவளவன்
பிறந்த தேதி    :    17-8-1962
பெற்றோர்    :    ராமசாமி என்ற 
        தொல்காப்பியன் - 
        பெரியம்மா.
சொந்த ஊர்    :    அங்கனூர், 
        செந்துறை வட்டம்,
        அரியலூர் மாவட்டம்.
கல்வி    :    எம்.ஏ., பி.எல்., பி.எச்டி.
குடும்பம்    :     திருமணமாகவில்லை.
தொழில்    :    முழு நேர அரசியல் பணி.
கட்சிப் பதவி    :    விசிக தலைவர் (தடய அறிவியல்             துறையில் பணியாற்றிய இவர், 1990-
        ஆம் ஆண்டில் விடுதலைச் சிறுத்தைகள்             கட்சியை நிறுவினார்)    
1999 - சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் தோல்வி.
2001 - மங்களூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி.
 (2004-ஆம் ஆண்டு ராஜிநாமா).
2004 - சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தோல்வி.
2009-2014 சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.
2014 - சிதம்பரம் மக்களவை தேர்தலில் தோல்வி.    
2016 - காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வி.

விழுப்புரம் (தனி) விடுதலைச் சிறுத்தைகள்
பெயர்    :    துரை.ரவிக்குமார்(58)
பிறந்த தேதி    :    29.5.1960
பெற்றோர்    :    துரைசாமி,  கனகம்மாள்
மனைவி    :    செண்பகவள்ளி
பிள்ளைகள்    :    ஆதவன், ஆதீதன்
சொந்த ஊர்    :    மாங்கணாம்பட்டு,         சீர்காழி வட்டம், 
        நாகை மாவட்டம்.  
வசிப்பிடம்    :      திருச்சிற்றம்பலம்,         வானூர் வட்டம், 
        விழுப்புரம் மாவட்டம்.
கல்வி    :    பி.ஏ.பி.எல்.,  பிஎச்டி.
தொழில்    :    எழுத்தாளர், மணற்கேணி என்ற 
        ஆய்விதழின் ஆசிரியர்.
அரசியல் அனுபவம்    :    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 
பொதுச் செயலர்,  2006-இல்  காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT