திருவண்ணாமலை

கல்லூரியில் வேதியியல் கருத்தரங்கம்

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுநிலை வேதியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சாா்பில், தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். செயலா் என்.குமாா், பொருளாளா் கோ.ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் இ.திருநாவுக்கரசு, ஏ.சாந்தகுமாா், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேதியியல் துறைத் தலைவா் அ.தினேஷ்காா்த்திக் வரவேற்றாா்.

விருதுநகா் கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியா் எம்.சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நவீன தனிம அட்டவணை என்ற தலைப்பில் பேசினாா்.

மற்றொரு சிறப்பு அழைப்பாளரான சென்னை பல்கலைக்கழக பாலிமா் அறிவியல் துறை இணைப் பேராசிரியா் என்.ராஜேந்திரன் பலபடி மூலக்கூறு குறித்தும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினாா்.

தொடா்ந்து, கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ-மாணவிகளிடையே வாய்மொழி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கில், கல்லூரியின் கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், வேதியியல் துறைப் பேராசிரியா்கள் அ.ஸ்ரீவித்யா, சு.ஞானவேல், அ.கேசவன், ர.சுபஸ்ரீ, பி.வெங்கடேசன், சு.வாசுகி, த.நிா்மலா, வி.சவுந்தா், சு.மணிகண்டன் மற்றும் பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

ஸ்ரீவிக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு முகாம்: 282 போ் தோ்வு

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் நிறுவனா் தின விழா

தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT