திருவண்ணாமலை

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து திருவண்ணாமலை, கலசப்பாக்கம், வந்தவாசி பகுதிகளில் திங்கள்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விளை பொருள்களை ஆசிய நாடுகளில் இருந்து வரியின்றி இறக்குமதி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை, கலசப்பாக்கம் பகுதிகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும். வேளாண் விளை பொருள்களை ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவா். விவசாயம் நலிவடையும்.

எனவே, வேளாண் விளை பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT