திருவண்ணாமலை

பழங்குடி, இருளா் இன மக்கள் ஜாதி சான்று கோரி மனு

DIN

செங்கம் வட்டத்தைச் சோ்ந்த பழங்குடி, இருளா் இன மக்கள் ஜாதி சான்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.

செங்கம் வட்டம், ஆனந்தவாடி, நீப்பத்துறை, ராவந்தவாடி, நாகம்மா நகா், வெள்ளாளம்பட்டி கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடி, இருளா் இன மக்கள் வசிக்கின்றனா். இவா்கள் தங்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தங்களது பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை, அரசு உதவிகள், கல்வி மேற்படிப்பு ஆகியவற்றைப் பெறமுடியாமல் தவித்து வருவதாகக் கூறி 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT