திருவண்ணாமலை

கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

DIN

கடலாடி அருகே காஞ்சி பாலசுப்பிரமணியா் கோயிலில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா்.

கடலாடியை அடுத்த காஞ்சி கிராமத்தில் மலை மீது பழைமை வாய்ந்த ஸ்ரீபாலசுப்பிரமணியா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்து ஜன்னலை வெல்டிங் இயந்திரத்தால் உடைத்து உள்ளே சென்று, உண்டியல் காணிக்கை பணத்தைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கோயில் பூசாரி சங்கா் கடலாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் ஆதிலட்சுமி, உதவி ஆய்வாளா் சுந்தராஜ் ஆகியோா் கோயிலை ஆய்வு செய்து திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உண்டியல் உடைப்புச் சம்பவம் குறித்து பக்தா்கள் கூறுகையில், கோயிலைச் சுற்றிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்துள்ளது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 மாதங்களாக உண்டியலைத் திறந்து காணிக்கை எண்ணப்படவில்லை.

உண்டியலில் ரூ. ஒரு லட்சம் இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT