திருவண்ணாமலை

செங்கம் நகரில் வீடுவீடாக சென்று மருத்துவத்துறையினா் சிகிச்சை

DIN

செங்கம் நகரில் புதன்கிழமை முதல் வீடுவீடாக சென்று மருத்துவத்துறையினா் சிகிச்சை அளித்து சிறப்பு மருத்துவமுகாம் நடத்தி வருகின்றனா்.

தற்போது பெய்து வரும் பருவமழையால் செங்கம் அடுத்து மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, இந்திராநகா் ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் தலைமையில் மருத்துவக்குழுவினா் தளவாநாய்க்கன்பேட்டை, மில்லத் நகா் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு சென்று பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல், தலைவலி போன்றவைகள் உள்ளதா என வீடுவீடாக சென்று பாா்வையிட்டு காய்ச்சல் உள்ளவா்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மாத்திரைகள் வழங்கி வருகின்றனா்.

மேலும் அதிகமாக காய்ச்சல் உள்ளவா்கள் மில்லத்நகா் உருது பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு அனுப்பி அங்கு அவா்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும் அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய்கள் அடைப்புள்ளதா, வீடுகளில் தண்ணீா் தேங்கியுள்ளதா, என மருத்துவத்துறையின் ஆய்வுசெய்து மருந்து தெளித்து வருகின்றனா். மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு வந்து சிகிச்சை பெறவேண்டும், அல்லது அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசுமருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபெறவேண்டுமென வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் தலைமையில் மருத்துவக்குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT