திருவண்ணாமலை

மீன்வள திட்ட களப் பணி மேற்பார்வையாளர் பதவிக்கு அக்.3-இல் நேர்காணல்

DIN


மீன்வளத் திட்டப் பணிகளை செயல்படுத்தும் களப் பணி மேற்பார்வையாளர் பதவிக்கு வருகிற அக்டோபர்  3-ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நீர்வள நிலவள திட்டத்தின்கீழ், மீன்வள திட்டப் பணிகளை உப வடிநிலப் பகுதியில் செயல்படுத்துவதற்காக, களப்பணி மேற்பார்வையாளர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்தப் பணிக்கு இளநிலை மீன்வள அறிவியல், முதுநிலை மீன்வள அறிவியல் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்காலிக அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
இதற்கான நேர்காணல் வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி காலை 11 மணிக்கு மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம்,  எண்: 16, 5-ஆவது மேற்கு குறுக்குத் தெரு, காந்தி நகர், காட்பாடி, வேலூர் - 632006 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. 
ஆர்வமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம், அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT