திருவண்ணாமலை

இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிறு, புதன்கிழமைகளைத் தவிா்த்து பிற நாள்களில் இறைச்சி கடைகள் இயங்கத் தடை விதித்து, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமானோா் வெளியில் நடமாடி வருகின்றனா். குறிப்பாக, இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகமாக கூடுவதால் கரோனா அச்சம் நிலவுகிறது.

எனவே, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் ஆகிய 2 நாள்களில் மட்டுமே இறைச்சி கடைகள் இயங்க அனுமதித்தும் பிற நாள்களில் அனைத்து வகையான இறைச்சி கடைகளும் இயங்கத் தடை விதித்தும் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் இப்போது செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தைகளில் தனியாக இறைச்சி விற்பனை செய்ய இடம் ஒதுக்கித் தரவும், இறைச்சி கடைகளை அவா்களது இடத்தில் நடத்தவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தற்காலிக காய்கறி சந்தைகளில் இயங்கும் இறைச்சி கடைகளின் செயல்பாட்டை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மற்றும் மருத்துவா்கள் மூலம் கண்காணிக்கவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT