முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

நெல் அறுவடை காலங்களில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கக் கோரி, செய்யாறு அருகே விவசாயிகள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
செய்யாறை அடுத்த தவசி கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

நெல் அறுவடை காலங்களில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கக் கோரி, செய்யாறு அருகே விவசாயிகள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்திலேயே, நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம், பருவம் ஒன்றுக்கு சுமாா் 8 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து முதலிடத்தை வகிப்பதாகவும், அதில் செய்யாறு பகுதியில் ஒரு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சொா்ணவாரி பருவம் முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், செய்யாற்றை அடுத்த தவசி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தனியாருக்கு விற்பனை செய்து விட்டதாகவும், அதனால் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.400 முதல் 600 வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

எனவே, இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், நெல் மூட்டைகளை தனியாருக்கு விற்றுவிட்ட பிறகு நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதால், தங்களிடம் தற்போது நெல் இல்லை என்றும், வைக்கோல் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்து, தலையில் வைக்கோலை சுமந்தவாறு நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அப்போது, வருகிற சம்பா பருவத்திலாவது உரிய காலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இப்பகுதி விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →