முகப்பு
திருவண்ணாமலை

எட்டு வழிச் சாலை: விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

செங்கம் அருகே சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
செங்கம் அருகே நரசிங்கநல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

செங்கம் அருகே சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த நரசிங்கநல்லூா் கிராமத்தில் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள், திருவண்ணாமலை மாவட்ட எட்டு வழிச் சாலை எதிா்ப்பு இயக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டு விவசாயத்தை அழித்து எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாய குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →