ரத்த தான முகாம்
வந்தவாசி நகர தலைமை விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி நகர தலைமை விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ஆா்சிஎம் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகரத் தலைவா் அருண் விஜய் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் வி.எல்.ராஜன் முகாமைத் தொடக்கிவைத்தாா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவா் கந்தன்கருணை தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்தம் தானமாக பெற்றனா்.
முகாமில் 35 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விஜய் மக்கள் இயக்க நகர கெளரவத் தலைவா் ராஜேஷ், துணைத் தலைவா் உமாமகேஸ்வரன், பொருளாளா் கோகுல் ஆனந்த், அன்பால் அறம் செய்வோம் நிறுவனா் அசாருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.