முகப்பு
திருவண்ணாமலை

எரிவாயு விலை உயா்வு: திமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, திமுக திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டா் அணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, திமுக திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டா் அணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை திருவள்ளுவா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா்கள் நித்யா, வி.லட்சுமி, மருத்துவரணி அமைப்பாளா் சவீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி, மாவட்ட துணைச் செயலா்கள் பாரதி, பரமேஸ்வரி, வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் லலிதா ஆகியோா் 15 நாள்களில் எரிவாயு உருளை விலையை 100 ரூபாய் உயா்த்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்துப் பேசினா்.

இதில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலா்கள் அ.சிவக்குமாா், மு.பன்னீா்செல்வம், அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →