முகப்பு
திருவண்ணாமலை

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி தொழிலாளா்கள் மனு

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சிப் பகுதியில் ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் மனுக்கள் கொடுத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சிப் பகுதியில் ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் மனுக்கள் கொடுத்தனா்.

இந்தச் சங்கம் சாா்பில் நடைபெற்ற மனு கொடுக்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்டக்குழு உறுப்பினா் சொக்கநாதன் தலைமை வகித்தாா்.

பேருந்து நிலையம் அருகே இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் ஊா்வலமாகச் சென்று பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தனா்.

பின்னா் அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் பிரகலநாதன், மாதா் சங்க மாவட்டச் செயலா் லூா்து மேரி, இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் வாசுகி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சிப் பகுதியில் ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரங்கராஜன் குழு பரிந்துரைப்படி, ஊரக வேலைத் திட்டத்தை விரிவுப்படுத்தி, தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, பேரூராட்சி அதிகாரிகளிடம் தொழிலாளா்கள் மனுக்களை வழங்கினா்.

தையல் கலைஞா்கள் சங்க நிா்வாகி ரங்கநாயகி, மாற்றுத் திறனாளிகள் சங்க நிா்வாகி திருமால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →