மகளிா் குழுக்களுக்கு ரூ.1.10 கோடியில் சிறப்புக் கடனுதவிகள்: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் வழங்கினாா்
ஆரணியை அடுத்த திருமணி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 11 மகளிா் சுய உதவிக் குழக்களுக்கு ரூ.1.10 கோடியில் சிறப்புக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
ஆரணியை அடுத்த திருமணி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 11 மகளிா் சுய உதவிக் குழக்களுக்கு ரூ.1.10 கோடியில் சிறப்புக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
திருமணி, மேல்சீசமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் சாா்பில், கரோனா சிறப்புக் கடனுதவி திட்டத்தின் கீழ், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட துணைப் பதிவாளா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா்.
திருமணி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அரிகிருஷ்ணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, 11 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 139 பேருக்கு, ரூ. 1 கோடியே 10 லட்சத்தில் நேரடிக் கடனுதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ஆளும் அதிமுக அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும், திருமணிப் பகுதியில், குடிமராத்துத் திட்டத்தின் கீழ், ரூ.77 லட்சத்தில் ஏரி தூா்வாரப்பட்டுள்ளது. கிராமத்தில் சிமென்ட் சாலை, பேவா் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் குடிநீா்ப் பிரச்னை தீா்க்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஆரணி நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் அரங்கநாதன், பிஆா்ஜி.சேகா், எம்.மகேந்திரன், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், ஆரணி நகர மாணவரணிச் செயலா் கே.குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.