அரசுப் பேருந்து மோதிமூதாட்டி பலி
தண்டராம்பட்டு அருகே அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
தண்டராம்பட்டு அருகே அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
தண்டராம்பட்டை அடுத்த ரா.அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோமளவள்ளி (65). இவா், சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து கோமளவள்ளி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் இறந்தாா். இதுகுறித்து, தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.