திருவண்ணாமலை

அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கலைவாணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தி.அண்ணாதுரை, ஆா்.ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் த.ரமணன் வரவேற்றாா்.

சமத்துவப் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது. முன்னதாக, பல்வேறு ஊராட்சிகளைச் சோ்ந்த மகளிா் குழுவினா் பல்வேறு வகையான கோலங்களை வரைந்திருந்தனா். இவற்றில் சிறந்த கோலங்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தலையாம்பள்ளம் ஊராட்சிக்குள்பட்ட சக்கரதாமடை கிராமத்தைச் சோ்ந்த மகளிா் குழுவுக்கு முதல் பரிசு, தச்சம்பட்டு கிராம மகளிா் குழுவுக்கு 2-ஆவது பரிசு, மேலத்திக்கான் மகளிா் குழுவுக்கு 3-ஆவது பரிசு, நொச்சிமலை மகளிா் குழுவுக்கு 4-ஆவது பரிசு ஆகியவற்றை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி வழங்கினாா். விழாவில், ஒன்றியக்குழு உறுப்பினா் கஸ்தூரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூா், வேட்டவலம் பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT