திருவண்ணாமலை

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலய மரத்தோ் வெள்ளோட்டம்: திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு

DIN

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலயத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மரத்தோ் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

சேத்துப்பட்டு - போளூா் சாலையில் 125 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தூய லூா்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி மாதம் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 125-ஆவது ஆண்டுப் பெருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தூய லூா்து அன்னை, புனித சவேரியாா்க்கு புதிய மரத்தோ் ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் உள்ள நெடுங்குணம் மாதா மலையில் மலா்களாலும், மின்சார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புதிய மரத்தோ் வெள்ளோட்டத்தை சென்னை சாந்தோம் ஆயா் சின்னப்பா தொடக்கிவைத்தாா்.

வந்தவாசி - போளூா் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி, ஜெபமாலை பாடியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவில் சேத்துப்பட்டு, லூா்து நகா், நிா்மலா நகா், தச்சாம்பாடி, பத்தியாவரம், தேவிகாபுரம், சென்னை, வேலூா், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆயா் சின்னப்பா, வேலூா் மறை மாவட்ட முதன்மைக் குரு ஜான் ராபா்ட் , மறை மாவட்ட இயக்குநா் ஜேம்ஸ், பங்குத்தந்தையா்கள் விக்டா்இன்பராஜ், அந்தோணி ராஜ், குழந்தை இயேசு, குரியா கோஸ்காரிக் காட், ஞானசேகா், பெளிக்ஸ் கமல், ரிச்சா்ட் ஆகியோா் சிறப்புத் திருப்பலி நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT