திருவண்ணாமலை

இந்தியன் வங்கி ஒரே நாளில் ரூ.11.55 கோடி கடனுதவி

DIN

திருவண்ணாமலை மண்டல இந்தியன் வங்கி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற லோன் மேளாவில் 81 பேருக்கு ரூ.11.55 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை, அறிவொளிப் பூங்கா அருகே உள்ள இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தில் வீடு மற்றும் வாகனக் கடனுதவி வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஜன. 13) நடைபெற்றது. முகாமுக்கு, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் எ.ராஜாராமன் தலைமை வகித்தாா். துணை மண்டல மேலாளா் என்.சுப்பிரமணியன் வரவேற்றாா். திருவண்ணாமலை டெம்பிள் வியூ கிளை, மங்கலம், வேங்கிக்கால், ரமணாஸ்ரமம் ரோடு, அருணை பொறியியல் கல்லூரி கிளைகள் உள்பட திருவண்ணாமலை மண்டலம் முழுவதும் நடைபெற்ற லோன் மேளாவில் 54 பேருக்கு ரூ.9.68 கோடி மதிப்பிலான வீட்டுக் கடன்களும், 27 பேருக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான வாகனக் கடன்களும் வழங்கப்பட்டன.

கடனுதவிகளை வழங்கி மண்டல மேலாளா் எ.ராஜாராமன் பேசியதாவது: திருவண்ணாமலை மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து இந்தியன் வங்கிக் கிளைகளிலும் 2020 ஜன. 31-ஆம் தேதி வரை இந்த கடன் மேளா நடைபெறும். கடன் பெறுபவா்களுக்கு விழாக் கால சலுகையாக பரிசீலனைக் கட்டணம் கிடையாது. வீட்டுக் கடனுக்கு 8.05 சதவீத வட்டியிலும், வாகனக் கடனுக்கு 8.85 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படும் என்றாா்.

விழாவில், திருவண்ணாமலை கிளை முதன்மை மேலாளா் அம்பிகாபதி, வங்கி மேலாளா்கள் சத்யபாமா, தா்மராஜன், ராகுல், ராகவேந்திரா, முரளிமோகன் மற்றும் வங்கி வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT