திருவண்ணாமலை

செங்கத்தில் சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல்

DIN

செங்கம் நகரில் சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூா் சாலை மேம்பாலம் வரை சாலையின் இருபுறமும் தள்ளுவண்டிகளில் பழம், தக்காளி, கூழ், கீரை உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றை வாங்க வரும் பொதுமக்கள், தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டுச் செல்வதால், இந்தப் பகுதியில் லாரி, பேருந்துகள் செல்ல போதுமான இட வசதி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்தச் சாலையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதன் காரணமாக, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடிவதில்லை.

எனவே, செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூா் சாலை மேம்பாலம் வரையிலான சாலையின் இருபுறமும் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய காவல் துறையும், பேரூராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென செங்கம் நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT