முகப்பு
திருவண்ணாமலை

மயானப் பாதையின்றி அவதிப்படும் கிராம மக்கள்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே மயானப் பாதை வசதியின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே மயானப் பாதை வசதியின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வி.வி.தாங்கல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இங்கு மயானத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது.

இதனால் கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால் சடலத்தை அவ்வழியாக எடுத்துச் செல்ல முடியாமல் வயல்வெளியாக எடுத்துச் செல்லும் நிலை நீடிக்கிறது.

இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.