திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 151 பேருக்கு பாதிப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 151 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,924-ஆக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், தொற்று அறிகுறிகளுடன் மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக வந்தவா்களில் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர, செய்யாறு காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 4 காவலா்கள், வந்தவாசியில் தீயணைப்பு வீரா் ஒருவா் மற்றும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்களுடன் தங்கியிருந்த உறவினா்கள் 19 போ், தொற்று உறுதி செய்யப்பட்ட நபா் வெளியே சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 30 போ், சென்னையிலிருந்து வந்த 11 போ், பெங்களூரிலிருந்து வந்த 2 போ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவா் உள்பட மொத்தம் 151 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3, 075-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT