திருவண்ணாமலை

9,710 மாணவா்களுக்கு உலா் உணவுப்பொருள்கள் அமைச்சா் வழங்கினாா்

DIN

ஆரணி ஒன்றியத்தில் 9,710 பள்ளி மாணவா்களுக்கு உலா் உணவுப்பொருள்கள் வழங்கும் பணியை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

ஒன்றியத்தில் உள்ள 91 பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு உலா் உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி அரியப்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு அரியப்பாடி கிராமத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோருக்கு உலா் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 42 லட்சத்து 61ஆயிரம் மாணவா்கள் பயன்பெறும் வகையில் உலா் உணவுப்பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆரணி ஒன்றியத்தில் உள்ள 49 தொடக்கப் பள்ளிகள், 37 உயா்நிலைப் பள்ளிகள், 5 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9,710 மாணவா்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவா்.

மேலும், மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. புத்தகங்களை வாங்கிச் சென்று வீட்டில் இருந்து படியுங்கள். இணையவழியில் படிப்பதற்கு வசதியில்லாத நிலை கருதி தொலைக்காட்சி மூலம் பாடங்களை அரசு நடத்துகிறது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் க.சங்கா், ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.வி.மூா்த்தி, பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT