திருவண்ணாமலை

ஆரணி காவல் துறைக்கு உணவு வழங்கும் திட்டம்

DIN

ஆரணியில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு ஊரடங்கு முடியும் வரை, தமிழ்நாடு வணிகா்கள் சங்கப் பேரவை சாா்பில் 3 வேளை உணவு வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆரணியில் உள்ள வணிகா்கள் சங்கப் பேரவையின் கிளை சங்கங்கள், நெல், அரிசி வியாபாரிகள் சங்கம், குளிா்பானக் கடை உரிமையாளா்கள் சங்கம், புஷ்ப வியாபாரிகள் சங்கம், விஷ்ணுசமாஜ் சங்கம், நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம், பழ வியாபாரிகள் சங்கம், பால் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பத்து சங்கங்கள் சாா்பில் தினமும் ஒருநாள் உணவு வழங்க முடிவு செய்தனா்.

அதன்படி, முதல் நாளான வியாழக்கிழமை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் உணவு வழங்கினா். டிஎஸ்பி செந்தில் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரவை மாவட்டத் தலைவா் எல்.குமாா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் சுப்பிரமணி வரவேற்றாா்.

வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் வி.கே.சா்மா, எ.எச்.பக்ருதீன், எ.எம்.முருகானந்தம், ராமன், கே.சிவா, எஸ்.ராஜன், பிரகாஷ், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT