திருவண்ணாமலை

செய்யாறு அரசுப் பள்ளியில் காய்கறிகள் கடைகள்

DIN

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காய்கறி கடைகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் செயல்படும் என்றும், வேறு இடங்களில் காய்கறி கடைகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும என மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. வேகமாக பரவி வரும் கரோனா வைரஸை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில், ஞாயிற்றுக்கிழமை முதல் (மாா்ச் 29) செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் அரசின் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை காய்கறிகள் கடைகள் செயல்படும்.

எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், இதைத் தவிர செய்யாறு நகரில் வேறு எங்காவது காய்கறி கடைகள், தள்ளு வண்டி கடைகள் செயல்பட்டால் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT