முகப்பு
திருவண்ணாமலை

வாக்குச்சாவடி முகவா்கள் நியமனப் படிவங்கள்அமைச்சா் வழங்கினாா்

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்களை நியமிப்பதற்கான படிவங்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி மோகன் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்களை நியமிப்பதற்கான படிவங்களை கட்சியின் நகர, ஒன்றியச் செயலா்களிடம் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி மோகன் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆரணி நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ப.திருமால், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட பொருளாளா் அ.கோவிந்தராசன், செய்யாறு ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், சி.துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.