திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,099 மனுக்கள்

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 1,099 மனுக்கள் வரப்பெற்றன.

கரோனா பொது முடக்கத்தை யொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் தொலைபேசி வழி மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதாபேகம் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில், தொலைபேசி வழியே 100 மனுக்களும், கட்செவி அஞ்சல் வழியே 125 மனுக்களும், பொதுமக்களிடமிருந்து நேரடியாக 874 மனுக்களும் என 1,099 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT