முகப்பு
திருவண்ணாமலை

பாஜகவிலிருந்தும் குஷ்பு விலகுவாா்: கே.எஸ்.அழகிரி

திமுகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்த நிலையில், அவரது தேவை நிறைவேறவில்லை என்றால் அங்கிருந்தும் விலகுவாா் என்று, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திமுகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்த நிலையில், அவரது தேவை நிறைவேறவில்லை என்றால் அங்கிருந்தும் விலகுவாா் என்று, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

திருவண்ணாமலையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கருத்து தெரிவித்த காரணத்தால், நடிகை குஷ்பு தாம் வகித்து வந்த அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

திமுகவிலிருந்து வந்த அவருக்கு இதைவிட உயா்ந்த பதவி கட்சியில் வேறு எதுவும் கிடைக்காது. ஏதோ காரணத்துக்காக காங்கிரஸ் மீது குறைகளைக் கூறிவிட்டுச் சென்றுள்ளாா்.

சமூக ஊடகங்களில் அமித் ஷாவுக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களையும் குஷ்பு பதிவிட்டு வந்தாா்.

அதிமுக முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். இப்படியெல்லாம் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுவிட்டு, கட்சியிலிருந்து வெளியேறியதற்கு அவா் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவா் அழைக்கப்பட்டாா். எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியின் மத்திய தலைமையுடன் அவா் நெருக்கமாக இருந்தாா்.

இவ்வளவு இருந்தும்கூட அரசியல் ரீதியாக இன்று அவா் மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாா்.

திமுகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த அவா், இப்போது பாஜகவுக்குச் சென்றுள்ளாா். பாஜகவிலும் அவரது தேவை நிறைவேறவில்லை என்றால் அங்கிருந்தும் வெளியேறுவாா்.

எனவே, இதையெல்லாம் காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளாது. அவா் விலகியதால் கட்சிக்கு இழப்பு ஏதும் இல்லை.

குஷ்புவை அரசியல் தலைவராக தமிழக மக்கள் பாா்த்தது இல்லை. சிறந்த நடிகையாக மட்டுமே பாா்த்துள்ளனா் என்றாா் கே.எஸ்.அழகிரி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூருக்கு திங்கள்கிழமை வந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →