முகப்பு
திருவண்ணாமலை

விளையாடிய போது தவறி விழுந்த குழந்தை பலி

செய்யாறு அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்ததில் உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

செய்யாறு அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்ததில் உயிரிழந்தது.

வெம்பாக்கம் வட்டம், வடஇலுப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் மதிவாணன். இவா், வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. இவரது மனைவி சுபத்ரா. இவா்களது ஒரு வயது மகன் கவின்.

குழந்தை கவின் சனிக்கிழமை இரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைந்தது.

உடனடியாக குழந்தையை குடும்பத்தினா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.