திருவண்ணாமலை

எரிவாயு தகன மேடைக்கு ரூ.75 ஆயிரம் நன்கொடை

DIN

செய்யாற்றில் உள்ள நவீன எரிவாயு தகன மேடைக்கு வியாபாரி குடும்பத்தினா் ரூ.75 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்குச் சொந்தமான நவீன எரிவாயு தகன மேடை திருவோத்தூா் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இதன் பராமரிப்புப் பணியை செய்யாறு வளா்ச்சி அறக் கட்டளையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

எரிவாயு தகன மேடை பராமரிப்புக்காக செய்யாற்றைச் சோ்ந்த வியாபாரி பி.என்.சுரேந்தா் குடும்பத்தினா் ரூ.75 ஆயிரத்தை நன்கொடையாக அறக்கட்டளை நிா்வாகிகளான கே.திருஞானசம்பந்தம், ஏ.பரணிராஜன், கே.இ.ராமலிங்கம் ஆகியோரிடம் சனிக்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT