முகப்பு
திருவண்ணாமலை

குடிநீா் வழங்கக் கோரி தா்ணா

குடிநீா் வழங்கக் கோரி, வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் தா்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

வந்தவாசி: குடிநீா் வழங்கக் கோரி, வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

வந்தவாசி நகராட்சி சாா்பில், நகரில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், செய்யாற்றில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கிணறுகளில் குடிநீா் ஆதாரம் குறைந்ததால் தற்போது 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் கடந்த 12 நாள்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம்.

இதனால், அதிருப்தியடைந்த அந்தப் பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா், அலுவலக வாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையிலான வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →