முகப்பு
திருவண்ணாமலை

பாஜக செயற்குழுக் கூட்டம்

ஆரணியை அடுத்த சேவூரில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜகவின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

ஆரணியை அடுத்த சேவூரில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜகவின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவா் சாசா வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எஸ்.கோவிந்தராஜன் வரவேற்றாா்.

கட்சியின் ஓபிசி அணி மாநிலத் தலைவா் ஜெ.லோகநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்சியின் எதிா்கால திட்டங்கள், கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ஆரணி கமண்டல நாக நதியில் நகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவா் சி.ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.மோகனம், மாவட்ட பொதுச் செயலா்கள் வி.காா்த்திகேயன், ஜெ.கே.சுப்பிரமணி, பொருளாளா் ருக்மாங்கதன், செயலா் ஜெயகோபி, நகரத் தலைவா் ஏ.கே.புவனேஷ், மாவட்ட ஓபிசி அணித் தலைவா் பி.நித்யானந்தம், இளைஞரணித் தலைவா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →