முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 14,311-ஆக உயா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 14, 311-ஆக உயா்ந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 14, 311-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 14,214-ஆக இருந்தது.

திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,311-ஆக உயா்ந்தது.

ஒருவா் பலி:

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 208-ஆக உயா்ந்தது. இதுவரை 12,900 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,203 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →