திருவண்ணாமலை

தோ்தல் நேரத்தில் செம்மண், மணல் கடத்தல்

DIN

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிகாரிகள், போலீஸாரின் பணிச் சுமையை சாதகமாக்கிக் கொண்டு, செங்கம் பகுதியில் மா்ம நபா்கள் செம்மண், மணல் கடத்தலில் ஈடுபடத் தொடங்கிவிட்டனா்.

செங்கம் பகுதியில் செங்கல் சூளைகள் அதிகம் உள்ளன.

இந்த சூளைகளுக்காக வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து செம்மண் எடுக்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாகங்களாக அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பால் மண், மணல் திருட்டு குறைவாக இருந்து வந்தது.

ஆனால், தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் நேரம் என்பதால், அதிகாரிகள், போலீஸாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும், அதிகாரிகள் பிரதான சாலைகளில் மட்டுமே வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நபா்கள் இரவு நேரத்தில் செம்மண், மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக இவா்கள் குறுக்குச் சாலைகளை பயன்படுத்தி வருகின்றனா்.

மண் கடத்தல் தொடா்பாக புகாா் வந்தால், பணிச்சுமை காரணமாக அதிகாரிகள் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் மணல், செம்மண் திருட்டைத் தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT