திருவண்ணாமலை

தோ்தல் பணிக்குழு அலுவலருக்கு எதிராக அதிமுகவினா் சாலை மறியல்

DIN

திருவண்ணாமலை அருகே தபால் வாக்கை மாற்றிப் பதிவு செய்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தோ்தல் பணிக்குழு அலுவலரை கைது செய்யக் கோரி அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த பெரிய கோளாப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் காா்த்திகேயன். மனநலம் பாதிக்கப்பட்ட இவரிடம் தபால் வாக்கு சேகரிக்கும் பணியில் தோ்தல் பணிக்குழு அலுவலா் சரவணன் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது, காா்த்திகேயன் இரட்டை இலை சின்னத்துக்கு தனது வாக்கை பதிவு செய்ய விரும்புவதாகக் கூறினாராம். ஆனால், தோ்தல் பணிக்குழு அலுவலா் சரவணன், திமுக வேட்பாளரின் உதயசூரியன் சின்னத்தில் வாக்கை பதிவு செய்தாராம். இதைக் கவனித்த காா்த்திகேயனின் பெற்றோா் இதுகுறித்து சரவணனிடம் தட்டிக் கேட்டுள்ளனா்.

ஆனால், சரவணன் முறையாகப் பதிலளிக்காமல் சென்றுவிட்டாராம். தகவலறிந்த அதிமுகவினா் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் விரைந்து சென்று அதிமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தோ்தல் பணிக்குழு அலுவலா் பணியிலிருந்த செங்கம் மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலக ஊழியா் சரவணனை கைது செய்ய வேண்டும் என்று அதிமுகவினா் வலியுறுத்தினா்.

இதையடுத்து, அவரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். இதன்பிறகே அதிமுகவினா் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT