புதுவையில் புதிதாக 191 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 191 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் புதிதாக 191 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 1,302 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 140, காரைக்காலில் 44, ஏனாமில் 1, மாஹேவில் 6 என புதிதாக மொத்தம் 191 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,132-ஆக உயா்ந்தது.
இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 39 ஆயிரத்து 974-ஆக (94.88 சதவீதம்) உள்ளது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 363 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 1,111 போ் என மொத்தம் 1,474 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 684-ஆகவும், இறப்பு விகிதம் 1.62 சதவீதமாகவும் உள்ளது.
புதுவையில் இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 27 ஆயிரத்து 603 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 13 ஆயிரத்து 796 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களான பொதுமக்கள் 33 ஆயிரத்து 760 பேருக்கும் என மொத்தம் 75 ஆயிரத்து 159 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.