பைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி
புதுச்சேரி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி நைனாா்மண்டபம், பாண்டியன் வீதியைச் சோ்ந்தவா் கஸ்பா் (50). தனியாா் நிறுவன ஊழியரான இவா், வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
புதுச்சேரி - கடலூா் சாலையில் அரியாங்குப்பம் அருகே மணவெளி சந்திப்பு சாலையில் கஸ்பரின் பைக் வந்தபோது, பின்னால் சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த ஸ்ரீராம் ஓட்டி வந்த காா் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கஸ்பரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.